கீழே ராமு இறங்கி வந்தான் உடனே அகிலா ஆவலாய் "என்னங்க அவள் நல்லா சாப்பிட்டலா இல்லையாங்க மனசு படபடக்குது"
ராமு உடனே அகிலாவிடம் "அவள் நல்லா சாப்பிட்டா டா செல்லம் நீ கவலைபடாத அவள் சின்ன பொண்ணு எதையும் நம்ம கட்டாயபடுத்த முடியாது ரெண்டும்கெட்ட வயசு இவள் இப்படி தான் மொரண்டு புடிப்பா "என்று ஆறுதல் சொன்னான்
சரிங்க நான் அவளுக்கு மதிய சாப்பாடு செஞ்சுட்டேன் இருங்க அவள்கிட்ட போய் கொடுக்கிறேன் என்று வேகமாய் சொல்லிகொண்டே அடுப்பறைக்கு ஒடினால் அகிலா
அவள் டிபன் பாக்சை எடுத்து தன் சேலையால் துடைத்து வேகமாய் "ராம இந்தாடி குட்டிமா மதிய சாப்பாடு சமத்தா மிச்சம் வைக்காம சாப்பிடு என்று பாசத்துடன் சொன்னால் "அகிலா
"எனக்கு ஒன்னும் வேண்டாம் நான் அனிதாவை எனக்கு சாப்பாடு கொண்டு வர சொல்லி இருக்கேன் " என்று கூறி சாப்படை வாங்க மறுத்தால்
ராமு உடனே ரமாவிடம் "நீ வாங்குனாத்தான் அப்பா இன்னைக்கு சாப்பிடுவேன் இல்லாட்டி அப்பா கொலைபட்டினி கிடப்பேன்" என்று கூறி முகத்தை சோகமாய் வைத்து கொண்டார்.
"இல்லையப்பா என் தோழி அனிதா கொண்டு வர சாப்பாடு வேஸ்ட் ஆயிரும்ல" என்று வருத்தப்பட்டு சொன்னாள் ரமா
ராமுக்கு புரிந்தது ரமா அனிதவால் பெரிய மாற்றம் அடைந்தது அவள் எப்பொழுதும் அனிதா வீட்டு புராணத்தை பாடியதும் தெரிந்தது
இதை நான் எப்படி சரிகட்ட என்று ஆழந்த சிந்தனையில் இருந்தான் ராமு.அப்போது "அப்பா என்ன பலத்த யோசனை " என்று வினவினால் ரமா
ஒன்னும் இல்லை டா அம்மா உனக்காக பாத்து பாத்து சமைசுருகாங்க இன்னைக்கு ஒருநாள் நம்ம சப்பாட சாப்டுகோ என்றான் ராமு
அவள் வேண்டா விருப்பமாய் அதை வாங்கிகொண்டு நடையைகட்டினால் ரமா பள்ளிக்கு வேகமாய்.அவள் பள்ளி ரெண்டு தெரு தள்ளி தான் உள்ளது அதனால் அவள் சாவகாசமாய் நடந்து வந்தால்.அவளுக்கு அம்மாமேல் பயங்கர கோபமும் அனிதா வீட்டின் மேல் ஒருவித மோகமும் இருந்தது.
நம்ம பேசம்மா அனிதா வீட்ல பிறந்திருந்த நல்லா இருந்துருக்கும் பணக்கார வாழ்க்கை நினசெதேல்லாம் கிடைககும் விரும்புன சாப்பாடும் ஆர்டர் பண்ணி சாப்பிடுகலாம் என்று எண்ணி நடந்து கொண்டுஇருந்தால்
(தொடரும்............)
No comments:
Post a Comment