Search This Blog

Friday, October 1, 2010

ஷயிலு நீ ரொம்ப தூளு (சிறுகதை)

அன்று காலை 9 மணிக்கு அலுவலகத்துக்கு விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தான் .புதிதாய் திருமணம் ஆகிய நிலையில் அவனுக்கு வெளியூரில் 2 மாதம் ப்ராஜெக்ட் அவன் மட்டும் செல்லும் நிலை.அவனின் மனைவி ஷயிலு(Shylu) வாடிய பூவாய் இருந்தாள் அவனுக்கு புரிந்தது அவளின் ஏக்கம்.


அலுவலகத்துக்கு இரண்டு நாள் விடுப்பு போட்டான் அடுத்து சனி ஞாயிறு மொத்தம் 4 நாள் விடுமுறை ஆனது.இருவரும் நன்றாக ஊர் சுத்தவும் கோயில் பீச் ரேச்டுரன்ட் ஒரு இடமும் பாக்கி இல்லை.சுத்தி முடித்தார்கள்.திங்கள் கிழமை காலை 8 மணிக்கு ரயில் வண்டி புறப்படும் என்று அவன் பிரயாணத்துக்கு காலை 7 மணிக்கு தயார் ஆகையில் இவளுக்கு மனம் கேட்கவில்லை.


அவளுக்கு ஏதோ நடப்பது போல கனவில் தோன்றியது அதனால் பிரயாணத்தை தள்ளி போடுங்கள் மாலை வரை இல்லாவிட்டால் நானும் வருகிறேன் என்றாள் அவனுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தான்.அந்த நேரம் ஒரு கண்ணாடி ஒன்று கீழே விழுந்து உடைந்தது .அவள் அவனை மாலை வண்டியில் செல்ல சொன்னாள் அவனோ மறுத்தான் அவளின் கண்ணீர் அவனை கரைத்தது.


அவனும் அலுவலகத்தில் மாலை வண்டியில் செல்வதாக கூறி விட்டு ஆவலுடன் கோவிலுக்கு சென்று வந்தான் அவளுடன் . மதிய வேலை அவர்கள் தொலைகாட்சியில் செய்தி பார்க்கையில் அவன் செல்ல வேண்டிய ரயில் அகோர விபத்துக்குள் ஆனது தெரிய வந்தது இருவரும் சற்று உறைந்து போனார்கள்.


அப்போது தான் அவனுக்கு புரிந்தது மனைவியின் முழு அக்கறை அன்று முதல் அவன் மனைவியின் அருமையும் புரிந்து அவளின் வாக்கு தெய்வ வாக்கு என்று எண்ணினான்.அவளிடம் அபிப்ராயம் கேட்டே எந்த விஷயத்தையும் தொடங்கினான் .அவனுக்கு அனைத்துமே வசந்தமாய் அமைந்தது.அன்று முதல் விஷ்ணு சொல்லுவான் ஷ்ய்லு நீ ரொம்ப தூளு டாப் டக்கர் அவளும் முகம் சிவக்க நாணத்தில் சிரிப்பாள் அதை கேட்க்கையில்

No comments:

Post a Comment

Protected by Copyscape Online Plagiarism Checker