Search This Blog

Friday, October 1, 2010

சொல் பேச்சுக்கேக்காத சுந்தரியே ரமா -(Episode) 5


அம்மாமேல் மட்டும் ஆத்திரம் குறையவில்லை "அம்மா அனிதா சாப்பாடு சாப்பிடகூடாது அவள் வீட்டுக்கு போககூடாது என்ற இட்ட கட்டளை தான் அந்த கோபத்திற்கு காரணம்.


அனிதா படிப்பில் சுமார் தான் ரமாவோ படிப்பில் கெட்டிக்காரி அனால் என்று அனிதா வீட்டுக்கு போக ஆரம்பித்தாலோ விளையாட்டு தனமாய் மாறி படிப்பிலும் மதிப்பெண்கள் குறையஆரம்பித்தது 


அம்மா படி படி என்று எப்பொழுதும் போலதான் சொல்லுவார் ஆனால் அவளுக்கு அனிதா வீட்டுக்கு போகும் எண்ணம் வந்ததில் இருந்து அனிதா வீட்ல இந்நேரம் என்ன நடக்கும் என்ன சாப்பாடு என்ன விளையாட்டு நடக்கும் என்ன கம்மேடி நடக்கும் என்று அதில் தான் நாட்டம் வந்தது 


அம்மா இப்படி படி படி சொல்லி டார்ச்சர் பண்றாங்க சே சே என்று கோபம் உச்சிக்கு ஏறியதும் அவள் அந்த கோபத்தை காட்ட யோசித்தால்


அவள் நடந்து செல்லும் வழியில் ஒரு குப்பைதொட்டி கிடந்தது அம்மா கொடுத்த சாப்பாட்டை அதில் கொட்டிவிட்டு. தன் ஆத்திரம் தீரவும் அங்கு இருந்து நகர்ந்தால்


அவளுக்கு அந்த சாப்பாட்டை கொட்டியதும் மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதுபோல்.பள்ளியும் அருகில் வந்தது கொஞ்சம் தாமதமாய் பள்ளிக்குசென்றால் அன்றுமுதல்.


ஆசிரியரிடம் திட்டு வாங்க ஆரம்பித்தால் அவள் வாங்கிய நல்ல பெயர் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது அவள் ஒழுகினம் என்ற ஸ்தானத்தை சீகரமேஅடைந்தாள்.அன்று ஒரு நாள்யே அவளுக்கு திட்டு மட்டும் ஏராளம்.அவளுக்கு தெரியவில்லை கடவுள்கொடுத்த தண்டனை அம்மா கொடுத்த சாப்பட்டை குப்பையில் கொட்டியதற்கு என்று


ராமு பின் காலை சாப்பாடு சாப்பிட சென்றார்.அகிலாவிடம்" அகிலா நீ கவலைபடாதே நிம்மதியா இரு.இன்னைக்கு ராத்திரி நான் அவளுக்கு பக்குவமாய் சொல்றேன் என்று கூறி அலுவலகத்துக்கு புறப்பட்டார்


அகிலாவுக்கோ நம்ம பொண்ணு நல்லா இருக்கணும் என்ற அக்கறையில் அவள் கொஞ்சம் அப்படி கடைந்து நடந்துகொண்டால்.ரமா பாவம் என்று சொல்லி வருந்திக்கொண்டு இருந்தால்.அழுதுகொண்டே காலை உணவை சாப்பிட்துவிட்டு வீட்டுவேலைகலை செய்ய ஆரம்பித்தால் அகிலா


ரமாவோ சோகத்தில் இருந்தால் அப்போது.............


(தொடரும்............)
Protected by Copyscape Online Plagiarism Checker